பாகவதர் பாதையில் விக்ரம்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:55 IST)
விக்ரமுக்கு நல்ல குரல் வள‌ம். அவர் கலந்து கொண்ட கலை இரவுகளை பார்த்தவர்களுக்கு இது தெ‌ரியும். நட்சத்திர கலை விழாவில் மைக்கைப் பிடித்து பாடுகிற இரண்டே பிரபலங்கள் விஜய், விக்ரம்.

இதில் விஜய் பல படங்களில் பாடியிருக்கிறார். விக்ரமின் குரல்தான் இதுவரை பாடகர் அங்கீகாரம் பெறாமல் இருந்தது. அந்த குறையையும் தீர்த்து வைத்திருக்கிறது கந்தசாமி.

இந்தப் படத்தில் விவேகா எழுதிய நான்கு பாடல்கள் இதுவரை ஒலிப்பதிவாகியுள்ளது. இந்த நான்கு பாடல்களையும் விக்ரம் பாடியிருக்கிறார். முன்பு பாகவதர்தான் நடிக்கிற படத்தின் அனைத்து பாடல்களையும் பாடுவார். அவர் வழியில் இன்று அனைத்துப் பாடல்களையும் பாடிய நடிகர் என்ற பெருமை விக்ரமுக்கு கிடைத்திருக்கிறது.

கந்தசாமி ஸ்பானிஷ், இத்தாலி மொழிகளிலும் வெளியாகிறது. அந்தந்த மொழிகளிலும் விக்ரம் பாடினால் பாகவதருக்கு கிடைக்காத பெருமை வந்து சேரும். செய்வாரா சீயான்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

Show comments