நயன்தாரா தடை நீக்கம்

Webdunia
பையா படத்துக்கு வாங்கிய 25 லட்சம் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்ததால் நயன்தாரா மீதான தடையை நீக்கியது தய ா‌ ரிப்பாளர்கள் மற்றும் நடிகர் சங்கம்.

லிங்குசாமியின் பையா படத்தில் நடிக்க முதலில் நயன்தாரா ஒப்பந்தமானார். ஒரு கோடியே பத்து லட்சம் சம்பளம் பேசப்பட்டு 25 லட்சம் அட்வான்சும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

பையா படத்தின் ஹீரோ கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், சொன்ன தேதியில் பையா தொடங்கவில்லை. இதனால் நயன்தாரா கொடுத்திருந்த கால்ஷீட்கள் வீணாயின. மேலும், பேசிய சம்பளத்தை குறைக்கும்படி பையா தய ா‌ ரிப்பாளர்கள் தரப்பில் வற்புறத்தப்பட்டது. இதற்கு நயன்தாரா மறுத்ததால் அவருக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனது மூன்ற ு மாத கால்ஷீட் வீணானதாகக் கூறி வாங்கிய அட்வான்சை திருப்பித்தர மறத்தார் நயன்தாரா.

தய ா‌ ரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் கூட்டாக ஏற்படுத்தியிருக்கும் விதியின்படி, ஒரு நடிகர் ஒரு காட்சியிலாவது நடித்திருந்தால் அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தர தேவையில்லை. ஆனால், நயன்தாரா பையாவில் நடிப்பதற்கு முன்பே படத்திலிருந்து விலகியிருந்தார். அதனால், வாங்கிய அட்வான்ஸை திருப்பித்தரும்படி சங்கங்களின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

நயன்தாரா அதற்கு மறுத்ததால் தமிழ்ப் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பிற மொழிப் படங்களில் அவர் நடிக்காமல் இருக்கவும் அந்தந்த மொழி தய ா‌ ரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது.

சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் இம்மாத இறுதியில் தொடங்கயிருப்பதால் சங்கங்களின் உத்தரவுக்குப் பணிந்து அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்தார் நயன்தாரா. இதனால் நயன்தாரா மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக தய ா‌ ரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

"தடைகளைத் தாண்டி வரும் பராசக்தி": சுதா கொங்கரா நெகிழ்ச்சி - பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

கனி வெளியேறியபோது வருத்தப்பட்ட ரசிகர்கள் பாரு வெளியேறிய போது கொண்டாடுகின்றனர்.. இதுதான் பிக்பாஸ்..!

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பாரு, கம்ருதீனுக்கு 90 நாள் சம்பளம் கிடையாதா? துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

Show comments