ஆர்யா படத்தில் நீரவ்ஷா

Webdunia
இந்தியில் பலரும் அழைத்துக் கொண்டிருக்க அவற்றையெல்லாம் தவிர்த்து ஆர்யாவுக்காக ஓடோடி வந்திருக்கிறார் ஒளிப்திவாளர், நீரவ்ஷ ா. அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஓரம்போ தற்போது சர்வம் என ஆர்யாவின் முக்கியமான படங்களுக்கெல்லாம் கலர் கொடுத்தவர் இவர். ஆர்யாவின் புதிய படம் மதராசப்பட்டிணத்துக்கும் இவரே ஒளிப்பதிவு.

அதிக சம்பளம் தரும் இந்திப் படங்களை தவிர்த்து நீரவ்ஷ ா மதராசப்பட்டிணத்தில் பணிப ு‌ ரிய படத்தின் காலகட்டம் முக்கிய காரணம். இதுவொரு ப ீ‌ ரியட் படம். 1945ல் நடக்கும் கதை. கி‌ரீடம், பொய் சொல்ல போறோம் படங்களை இயக்கிய விஜயின் மூன்றாவது படம்.

ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் படத்தை தய ா‌ ரிக்கிறார். நாசர், வி.எம்.சி. ஹனிஃபா, பாலாசிங் என தேர்ந்த நடிகர்கள் படத்தில் உண்டு. நாயகி? வெளிநாட்டு பெண். ஹாலிவுட் நடிகைகளுக்கிடையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

‌ ஜ ி. வி. பிரகாஷ் இசை, நா. முத்துக்குமார் பாடல்கள் என பக்காவாக டீம் சேர்ந்துவிட்ட நிலையில் நாயகியும் கிடைத்தால் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராக இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments