தயாரிப்பாளர் சந்திரபோஸிடம் வாங்கிய முன்பணத்தை நடிகை நயன்தாரா கொடுத்து விட்டதால் அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன. பருத்திவீரன் கார்த்திவுடன் பையா என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா ஒரு கோடி ரூபாய் சம்பளத்துக்கு ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ்.படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக...