Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கணம் மீறும் ஆரண்ய காண்டம்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (19:53 IST)
வழக்கமான சினிமா இலக்கணத்தை மீறி இந்தப் படத்தை எடுத்து வருகிறோம் என்றார், அறிமுக இயக்குனர் குமாரராஜா. எந்தப் படம்? ஆரண்ய காண்டம்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை இந்த காலத்துக்கு ஏற்றபடி எடுப்பதில் மணிரத்னத்தை அடிக்க ஆளில்லை. அவரின் தளபதி, ரோஜா படங்கள் இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்டதே. தற்சமயம் படப்பிடிப்பில் இருக்கும் அசோகவனம் படமும் ராமாயணத்தின் ஒரு பகுதியை பின்னணியாகக் கொண்டே தயாராகி வருகிறது.

மணிரத்னத்துக்கு போட்டியாக கிளம்பியிருக்கிறார், அறிமுக இயக்குனர் குமாரராஜா. இவர் இயக்கும் ஆரண்ய காண்டமும் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டே தயாராகி வருகிறது. ராமாயணத்தின் வனவாசப் பகுதியில் வரும் ஒரு குறிப்பிட்டப் பகுதியை இந்த காலத்துக்கு ஏற்றபடி எடுத்து வருகிறார், குமாரராஜா.

ஜாக்கி ஷ ெ­ ராஃப் தாதாவாக இதில் நடிக்கிறார். எஸ்.பி.பி. சரண் படத்தை தயாரிக்கிறார். வழக்கமான சினிமா இலக்கணத்தை மீறி படத்தை எடுத்து வருகிறோம். இந்த வரம்பு மீறல் அனைவராலும் ரசிக்கப்படும். மேலும், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர ்‌ஷ‌ ியல் படமும்கூட என படத்தைப் பற்றி பரபரப்பை பற்ற வைத்தார் குமாரராஜா.

வித்தியாசமாக இருந்தால் ரசிக்க நாங்களும் தயார்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments