பகுத்தறிவின் பக்தி

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:40 IST)
தனது படங்களில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வரும் விவேக்குக்கு பகுத்தறிவே வினையாக விடிந்திருக்கிறது.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது அனைத்து சர்ச்சைகளும். கலைவாணருக்கே பத்மஸ்ரீ கொடுக்காதபோது சின்ன கலைவாணருக்கு எப்படி விருது கொடுக்கலாம் என கோடம்பாக்கத்தில் பொருமல் சத்தம் தொடர்ந்து கேட்கிறது.

இந்நிலையில் விருது கிடைத்ததுக்கு நன்றி தெ‌ரிவிக்க திருப்பதி சென்று பாலா‌ஜியை குடும்பத்துடன் த‌ரிசித்துவிட்டு வந்திருக்கிறார் விவேக். படங்களில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்கிறவர் இப்படி இரட்டை வேடம் போடலாமா என ஏற்றிவிடுகிறார்கள் விருது கிடைக்காத போட்டியாளர்கள்.

அப்படியே சாமி கும்பிடுவதாக இருந்தால் ஆந்திராவுக்கு ஏன் போக வேண்டும்? உள்ள ு‌ ரில் தமிழ் கடவுள் முருகன் இல்லையா என முறுக்குகிறார்கள்.

பதில் சொல்ல வார்த்தையை கோர்த்துக் கொண்டிருக்கிறார் பகுத்தறிவாளர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments