Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் விஜய்

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:06 IST)
அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என தொடர்ந்து மூன்று சுமார் படங்கள். அடுத்தப் படமாவது ஹிட்டாகுமா என்ற நிச்சயமில்லை. தன்னை காப்பாற்றவே வழியில்லாதபோது, அரசியலுக்கு வந்து தாய் நாட்டை காப்பாற்றுவார் விஜய் என ஊர் ஊராக சொல்லி வருகிறார் விஜயின் தந்தை, எஸ்.ஏ. சந்திரசேகரன்.

விஜயின் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை இவர்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய் படம் வெளியாகும் அன்று திரையரங்குகளில் வைக்கப்படும் பேன‌ரில் தொடங்கி, படப்பெட்டியை சாரட் வண்டியில் ஊர்வலமாக எடுத்துவரும் சடங்கு வரை அனைத்தின் பின்புலமும் இவர்தான்.

தனக்கு அரசியல் தெ‌ரியாது, அரசியலுக்கு வரமாட்டேன் என்று தனயன் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், சுயநலமில்லாத அவரைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என உசுப்பேற்றி வருகிறார், தந்தை.

தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.ஏ.சி. தனது இந்த கருத்தை மீண்டும் தெ‌ளிவாக எடுத்துரைத்தார். அதாவது, விஜய் அரசியல் பற்றி படித்து, அரசியலில் நுழைந்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக நல்லாட்சி தருவார். உபயம், அவரது ரசிகர்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போவார்களாம். தமிழா, உன் நிலைமை ரொம்ப கேவலமாக இருக்கேப்பா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments