Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக்க வருகிறார் கோபிகா

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:26 IST)
ஆடிய காலும், பாடிய வாயும் பழமொழியை‌த்தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. திருமணம் முடிந்து கணவருடன் அயர்லாந்தில் செட்டிலான கோபிகா மீண்டும் நடிக்க வருகிறார்.

இந்த அ‌ ரிய தகவலை அவர் வெளியிட்ட இடம் ஏசியாநெட் விருது வழங்கும் விழா. ஜெயராமுடன் கோபிகா நடித்த, 'வெறுதே ஒரு ப ா‌ ரியா' படம் 125 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்ததற்காக 2008-ன் சிறந்த நடிகையாக கோபிகா தேர்வு செய்யப்பட்டிருந்தார். விருது வாங்குவதற்காக திருவனந்தபுரம் வந்தவர், நல்ல கதையம்சம் உள்ள படம் அமைந்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெ‌ரிவித்தார்.

திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று கோபிகா சொல்லி முழுதாக ஒருவருடம் ஆகவில்லை. அதற்குள் இப்படியொரு பல்டி. சந்தேகமில்லாமல் கோபிகா தேர்ந்த நடிகைதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் பயோபிக் எடுத்தால் அது அவருடைய கதையாகதான் இருக்கும்… இயக்குனர் ஷங்கர் பதில்!

கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்னுடைய உரிமை… சிவகார்த்திகேயன் பதில்!

பழம்பெரும் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

இளையராஜாவின் ஹிட் பாடலை ‘ரிக்ரியேட்’ செய்யும் யுவன் ஷங்கர் ராஜா!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

Show comments