Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்த வைத்தியம்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (14:49 IST)
வெண்ணிலவு ஜன்னல் பார்க்க
பின்னிரவில் மெல்லிசை கேட்க
கண்களிரண்டில் காமம் பூக்க
உன்னை நானும் அணைத்தேனே...

கிக்கான இந்தப் பாடல் ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் இடம்பெறுகிறது. பிரேம்‌ஜ ி இசையமைத்திருக்கிறார். பாடல் வ‌ரிகள் மட்டுமில்லை பாடலுக்கான காரணமும் செ மச ூடு என்றார் படத்தின் இயக்குனர் எம். பிரபு. அதை கேட்பதைவிட நமக்கு வேற என்ன வேலை.

விக்கல் வந்தால் அதிர்ச்சியான தகவலை சொன்னால் போதும், விக்கல் நின்றுவிடும். இந்தப் படத்தில் காதலின் வாசலில் நிற்கும் விஜயலட்சுமிக்கு விக்கல் வருகிறது. அருகில் வாசலை திறந்துவைத்த ஜெய்.

பழமைகளை தூக்கியெறிவதுதானே காதல். விக்கல் நிற்க அதிர்ச்சியான தகவலை சொல்வதற்குப் பதில் விஜயலட்சுமியின் உதட்டில் அழுத்தமாக முத்தம் ப‌தித்து விடுகிறார், ஜெய். இந்த ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சியில் விக்கல் நின்று விடுகிறது. விக்கித்து நிற்கிறார் விஜயலட்சுமி. அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தில் ஜெய்.

இந்த விரும்பத்தகாத மௌனத்தில் வெட்கம்கெட்ட விக்கல் மீண்டும் வருகிறது. விஜயலட்சுமி வெட்கத்தில் பார்க்க, ஜெய் சொர்க்கத்தில் மிதக்க... வருகிறது வெண்ணிலவு டூயட்.

பாட்டைவிட சிச்சுவேஷன் பிரமாதம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!