கழற்றி விடப்பட்ட இசையமைப்பாளர்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:06 IST)
நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நான் அவன் இல்லையில் நடித்த ‌‌ஜீவன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். படத்தை இயக்குகிறவர், செல்வா. நான் அவன் இல்லை படத்தை இயக்கியவர்.

இரண்டாம் பாகத்தில் நாயகிகள் மட்டுமே மாறுகிறார்கள். ச‌ரியாகச் சொல்வதென்றால், மாற்றப்படுகிறார்கள். இசையமைப்பாளரை மாற்றும் எண்ணம் தய ா‌ ரிப்பாளர் இத்தேஷ் ஜெபக்குக்கு இல்லை. நான் அவன் இல்லை படத்துக்கு இசையமைத்த விஜய் ஆண்டனியே அனைவ‌ரின் சாய்ஸ்.

இந்த நல்லெண்ணத்துடன் அவரை அணுகியபோது ஆண்டனி கேட்டது ஐம்பது லட்சம். படம் தய ா‌ ரிக்க அல்ல, படத்துக்கு இசையமைக்க. நாக்க முக்கயில் ஆரம்பித்து விஜயின் வேட்டைக்காரன் வரை வந்துவிட்டார் விஜய் ஆண்டனி. அதன் எதிரொலிதான் இந்த ஐம்பது லட்சம்.

நமக்கு இந்த ஷங்கர் பட பட்ஜெட் கட்டுப்படியாகாது என்று அவருக்கு பதில் டி. இமானை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார், விஜய் ஆண்டனி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments