ஓட்டுனர் தமன்னா

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:23 IST)
சின்சியர் சிகாமணி ஆகியிருக்கிறார் தமன்னா. தமிழ் சினிமாவில் இப்போது இவர்தான் கனவுக் கன்னி. நயன்தாரா விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதென்றால் சும்மாவா.

விஷயத்துக்கு வருவோம். படிக்காதவன், அயன் படங்கள் முடிந்த நிலையில் லிங்குசாமியின் பையாவுக்கு தயாராகி வருகிறது இந்த பாப்பா. படத்தில் தமன்னா கார் ஓட்டும் காட்சி வருகிறதாம். தமன்னாவுக்கோ கார் ஓட்டத் தெ‌ரியாது. ஒரு காட்சி என்றால் சமாளிக்கலாம். ஊர்பட்ட காட்சிகள் இருந்தால்?

டிரைவிங் படித்தால்தான் ஆயிற்று என்று கறாராக கூறியிருக்கிறார் லிங்குசாமி. இயக்குனர் கட்டளை, மீற முடியுமா. மும்பையில் தனது தந்தையின் மேற்பார்வையில் தற்போது கார் ஓட்ட கற்று வருகிறார் தமன்னா.

நல்லவேளை இப்போதெல்லாம் ச‌ரித்திரப் படங்கள் வருவதில்லை. காருக்குப் பதில் தேரோட்டுவது எவ்வளவு சிரமம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

Show comments