போரை நிறுத்துங்கள் - வடிவேலு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (18:29 IST)
இலங்கையில் நடந்துவரும் இன அழிப்பு போரை உடனே நிறுத்த வேண்டும் என்ற க ோ‌ ரிக்கையுடன் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் செங்கல்பட்டு சட்டக் கல்ல ூ‌ ர ி மாணவர்கள்.

ஊண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்ட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சத்யரா‌ஜ், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட திரையுலகினர் சில நாட்கள் முன்பு சந்தித்து பேசினர்.

நேற்று, இயக்குனர்கள் சுந்தர் சி., மனோபாலா, ஆர்.கே. செல்வமணி, ஷரவண சுப்பையா மற்றும் நடிகர் வடிவேலு ஆகியோர் மாணவர்களை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

பிறகு பத்த ி‌ ரிகையாளர்களிடம் பேசிய செல்வமணி, மாணவர்கள் தொடங்கிய எந்தப் போராட்டமும் தோல்வி அடைந்தது இல்லை. இந்தப் போராட்டமும் வெற்றி பெறும் என்றார்.

“இலங்கை அரசு போரை நிறுத்த உடனடியாக மத்திய அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார் வடிவேலு.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களையும் திரையுலகினர் சந்தித்தனர். உடல்நிலை மோசமடைந்துள்ளதால் உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவர்கள் மாணவர்களை கேட்டுக் கொண்டனர். அதற்கு மாணவர்கள் மறுத்துவிட்டனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments