Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் சீமான்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:05 IST)
ஈழத ் தமிழருக்காக குரல் கொடுத்து இரண்டாவது முறையாக சிறை சென்ற சீமான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஈழத ் தமிழர்பால் தமிழக மக்களுக்கு இருந்த பேரன்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் வெளிப்பட்டதற்கு சீமானின் ராமேஸ்வரம் மற்றும் ஈரோடு பேச்சுக்கு முக்கிய பங்குண்டு. இதை உணர்ந்ததாலேயே அவர் சிறை வைக்கப்பட்டார் என்றொரு கருத்து அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.

அது போகட்டும். நமது விஷயத்திற்கு வருவோம். வத்தலகுண்டில் மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பில் சீமான் நடித்துக் கொண்டிருந்த போதுதான் இரண்டாவது முறை கைது செய்யப்பட்டார்.

சீமான் கைது செய்யப்பட்டதால் அவருக்குப் பதில் வேறு நடிகர் நடிப்பார் என்ற செய்தியை மறுத்த, மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இயக்குனர் ராசு மதுரவன் சீமானுக்காக படக்குழு காத்திருக்கும் என்றார்.

சொன்னதுபோல் சீமானின் வருகைக்காக காத்திருந்தது மொத்த யூனிட்டும். ஜாமீனில் வெளிவந்த சீமான் தனக்காக மற்றவர்கள் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நேற்று முன்தினம் படப்பிடிப்பு நடைபெறும் வத்தல்குண்டுக்கு சென்றார்.

வத்தல்குண்டில் தற்போது சீமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன. படக்குழுவின் சிரமத்தை உணர்ந்து படம் முடியும்வரை அரசுக்கு மூக்கு வியர்க்கும் வகையில் எதுவும் பேசுவதில்லை என அவர் முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெ‌ரிவித்தன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

Show comments