' ஸ்லம் டாக் மில்லியனர ்' படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
webdunia photo
FILE
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கில படமான 'ஸ்லம் டாக் மில்லியனர ்' என் ற படத்துக்க ு ஏ. ஆர ். ரகுமான ் இசையமைத்துள்ளார ். லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கிய இந்த படத்தில் நடிகர் அனில் கபூர், தேவ் படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
இப்படம் பெருமை மிகு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை தட்டிச் சென்ற நிலையில், சினிமா உலகின் தலைசிறந்த பரிசாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2 சிறந்த பாடல்களுக்கும் சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கும் ஏ. ஆர ்.ர குமான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சைமன்), சிறந்த படத்தொகுப்பு, சவுண்ட் எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்சிங் (ரெசூல் பூக்குட்டி), சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர் (டேனி போய்லே) உட்பட மொத்தம் 10 பிரிவுகளில் இந்த படம் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் நடக்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். அப்போதுதான், 'ஸ்லம் டாக் மில்லியனர ்' படத்துக்கு என்னென்ன விருதுகள் கிடைக்கும் என்பது தெரியவரும்.
இது பற்றி ஏ.ஆர். ர குமான் தெரிவிக்கையில ், '' ஆஸ்கர் விருதுக்கு 'ஸ்லம் டாக் மில்லியனர ்' படம் பரிந்துரைக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இறைவன் கருணையாலும், மக்களின் பிரார்த்தனையாலும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்லது நடந்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறத ு'' என்றார்.