தமிழக்கு வரும் அருந்ததி

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:32 IST)
வெற்றி மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் அனுஷ்கா. மழை என்றால் சாதாரண மழையல்ல.. அடை மழை.

ரெண்டு படத்துக்குப் பிறகு தெலுங்குக்குப் போன அனுஷ்கா அங்கு கொடுத்ததெல்லாம் வெற்றிப் படங்கள். பில்லா தெலுங்கு ‌‌ரீமேக்கில் நயன்தாராவின் டூ பீஸ் உடையில் நடிக்க இவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் ஒரு கோடி. ஆச்ச‌ரியம் வேண்டாம், இந்த சம்பளம் மேலும் உயரலாம்.

இம்மாதம் 16‌ம் தேதி அனுஷ்கா இரண்டு வேடங்களில் நடித்த அருந்ததி ஆந்திராவில் வெளியானது. கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இந்தப் படம் அங்கு கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. ஹீரோயின் ஓ‌ ரியண்ட் படம் என்பதால் அலுங்காமல் சிதறாமல் அத்தனை புகழும் அனுஷ்காவுக்கே கிடைத்திருக்கிறது.

தமிழில் விஜய், சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாலும், மாயாஜால கதைக்கு தமிழில் வரவேற்பு இருக்கும் என்பதாலும் அருந்ததியை அடுத்த மாதம் தமிழில் வெளியிடுகிறார், படத்தின் தய ா‌ ரிப்பாளர், ஷியாம் பிரசாத்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments