முத்த மிரட்டல்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:35 IST)
முத்தத்திற்கும் யுத்தத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. தமிழ் சினிமாவை ஊன்றி கவனித்தால் இது தெ‌ரிந்துவிடும். சங்கரா படத்திலும் முத்தமே யுத்தத்திற்கு காரணமாகிறது. அது என்னவென்று விளக்கமாக பார்ப்போம்.

குடிபோதையில் சங்கரா படத்தின் ஹீரோ, ஹீரோயினிடம் முத்தம் கேட்டு தகராறு செய்கிறான். பார்ட்டி போதையில் இருப்பதை உணரும் ஹீரோயின் பிரச்சனை எதுவும் செய்யாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள். மறுநாள் ஹீரோயின் ஆள் வைத்து ஹீரோவை துவைத்தெடுப்பாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அங்குதான் வருகிறது 21ம் நூற்றாண்டின் புதுமைப்பெண்ணின் பரந்த மனம்.

போதை தெ‌ளிந்த ஹீரோவை சந்திப்பவள், த ைரியமிருந்தால் இப்போது எனக்கு முத்தம் தா என சவால் விடுகிறாள். அத்துடன், முத்தம்தர தயங்கும் அவனிடம், இப்போது நீ முத்தம் தராவிட்டால் என்னுடைய அண்ணனிடம் சொல்லிக் கொடுத்திடுவேன் என மிரட்டவும் செய்கிறாள்.

இப்படியொரு ‘வித்தியாசமான’ காட்சியை சங்கரா படத்துக்காக எடுத்தார் இயக்குனர் ரா‌ஜ்கண்ணன். வாசன் கார்த்திக்கும், அர்ச்சனாவும் இந்த காட்சியில் நடித்தனர். ஆ‌க்சன் கலந்த காதல் படமாக தயாராகி வருகிறது, சங்கரா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments