அதிரடிக்கு தயாராகும் ஆறுமுகம்

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (17:59 IST)
கமல ், ர‌ஜினி என சூப்பர் ஸ்டார்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பரத்தை வைத்து இயக்கியிருக்கும் படம் ஆறுமுகம். சீனியர்களை வேலை வாங்கியவர் முதல்முறையாக ஒரு ஜுனியரை வைத்து படமெடுத்துள்ளார். ‌ரிசல்ட் எப்படியிருக்கும ்?

அமோகமாக என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. பரத்தின் டெடிகேஷன் பிரமிக்க வைத்ததாக கூறியிருப்பவர ், விரைவில் அவர் பெ‌ரிய இடத்துக்கு வருவார் என ஆருடமும் கூறியிருக்கிறார்.

ஆறுமுகத்தில் ப்‌ரியாமண ி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். படையப்பா அளவுக்கு ரம்யா கிருஷ்ணனுக்கு ஆறுமுகம் பெயர் வாங்கித் தரும் என்பது அனைவ‌ரின் நம்பிக்கை. கேரக்டர் அந்தளவு வெயிட்டானதாம்.

சுரேஷ் கிருஷ்ணாவின் பாட்ஷ ா, அண்ணாமலை படங்களுக்கு இசையமைத்த தேவா ஆறுமுகத்துக்கு இசையமைத்துள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள். ஐந்தும் தேனிசை. பாடல்களை விரைவில் வெளியிட்ட ு, அடுத்த மாதமே படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலி வசூல் கணக்குகளை காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்.. துரந்தர் 2 வசூல் குறித்து பிரபல இயக்குனர்..!

கார் விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு.. அதிவேகத்தில் கார் சென்றதால் விபத்தா?

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2!.. வசூல் சும்மா கொட்டுது!..

Show comments