விஜயகாந்த் படத்துக்கு தடை

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:45 IST)
யுவஸ்ரீ க ி‌ ரியேஷன்ஸ் தங்கரா‌ஜ் தய ா‌ ரிப்பில் விஜயகாந்த் நடித்திருக்கும் படம், எங்கள் ஆசான். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கலைமணி இயக்கியிருக்கும் எங்கள் ஆசான் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை வெளியிட அனைத்து வேலைகளும் நடந்து வந்தன. இந்நிலையில் மெட்ரோ ஆடியோ நிறுவனத்தின் உ‌ ரிமையாளர் காஜாமொய்தீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

எங்கள் ஆசான் படத்தின் தய ா‌ ரிப்பாளர் தங்கரா‌ஜ் மெட்ரோ ஆடியோ நிறுவனத்திடம் 49 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிவிட்டு அதனை இதுவரை திருப்பித்தரவில்லை. பணத்தை திருப்பித் தரும்வரை எங்கள் ஆசான் படத்தை வெளியிட‌த் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து செவன்த் சானல் மாணிக்கம் நாராயணன் சார்பிலும் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் தங்கரா‌ஜ் 11 லட்சம் தர வேண்டும், பணத்தை செட்டில் செய்யும் வரை படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை விச ா‌ ரித்த நீதிபதி, வரும் 21 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால‌த் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அன்று தங்கரா‌ஜ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இந்த‌த் தடை காரணமாக எங்கள் ஆசான் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் தெரியுது.. ஏன் விஜய் அமைதியா இருக்காருனு? ஜனநாயகனில் திடீர் திருப்பம்

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

Show comments