ஹீரோக்களின் திடீர் விலகல்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:44 IST)
ஹீரோயின்கள்தான் திடீர் திடீரென்று படங்களிலிருந்து மாறிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஹீரோக்களையும் தொற்றியிருக்கிறது இந்த வியாதி.

ஆட்டநாயகனில் நடித்துவரும் ஷக்தி அடுத்து பத ்‌ ர ி இயக்கத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடிப்பதாக இருந்தது. எம்.‌ஜ ி.ஆ‌ ரின் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்போது என்ன ஆனதோ, எங்க வீட்டுப் பிள்ளையில் ஷக்தி நடிக்கவில்லை. அவருக்குப் பதில் வேறு ஹீரோவை தேடி வருகிறார்கள்.

ரசிக்கும் சீமானே, இந்திரவிழா, இடம்வலம், மா, துரோகி, மாணவர் தினம் என அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், சாமிடா வடிவுடையானின் நாஞ்சில், ஐந்தாம் திசை படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்தப் படத்திலிருந்து ஸ்ரீ விலகியிருக்கிறார். கால்ஷீட் பிரச்சனை விலகலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ஹீரோக்களின் விலகல் தொடர் கதையாகி வருவதால் கலக்கத்தில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments