கவர்ச்சிக்கு மாறும் கார்த்திகா

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:19 IST)
தமிழ் சினிமா நடிகைகளில் முக்கால்வாசி பேருக்கு மலையாள முகம். கால்வாசி பேருக்கு இந்தி முகம். தமிழ்? சினேகா, சந்தியா என்று விரல் விட்டுதான் எண்ண வேண்டும்.

இந்த‌க் குறைவான எண்ணிக்கையில் நிறைவாக தெ‌ரியும் மற்றொரு நடிகை, தூத்துக்குடி கார்த்திகா. ராமன் தேடிய சீதையில் அற்புதமாக நடித்த இவரது புதிய படங்கள் எதுவும் வெளியாகாதது கவலையளிக்கும் விஷயம்.

அலையோடு விளையாடு, 365 காதல் கடிதங்கள், வைதேகி என மூன்று படங்கள் இவரது நடிப்பில் முடிவடைந்து ‌ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இந்த மூன்றிலும் பாவாடை தாவணிதான் இவரது காஸ்ட்யூம். இப்படியே போனால் பாவாடை தாவணிக்கு மட்டும் ஒதுக்கி விடுவார்களோ என்ற நியாயமான பயத்தில் புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் கார்த்திகா.

மாடர்னான கிளாமர் வேடங்களிலும் நடிப்பது என்பதுதான் அந்த முடிவு. மும்பை மற்றும் மலையாள நடிகைகளுடன் போட்டிபோட இதுதான் ச‌ரியான முடிவு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments