Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல்டன் குளோப் - ச‌ரித்திரம் படைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (19:20 IST)
66 வது கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. உலக ச‌ரித்திரத்தில் முதல் முறையாக Bநளவ டிசப ை iயேட ளஉடிசந ப ி‌ ரிவில் இந்தியர் ஒருவர் விருது வென்றார். அவர் இசைப்புயலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

ஆஸ்காருக்கு முந்தைய படியாக கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. அதனால் கோல்டன் குளோப் விருது பெறுவது ஒவ்வொரு கலைஞருக்கும் வாழ்வின் தவிர்க்க முடியாத கனவு. ஆஸ்காரைப் போலவே கோல்டன் குளோபும் இந்தியாவுக்கு நிறைவேறாத கனவாகவே இருந்து வந்தது... நேற்றுவரை.

66 வது கோல்டன் குளோப் விருதுகளுக்கான ப ா pந்துரைப் பட்டியலில் Best original scor e ப ி‌ ரிவில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படம் இடம் பிடித்தது. விகாஸ் ஸ்வரூப்பின் q/a நாவலை தழுவி ப ி‌ ரிட்டிஷ் இயக்குனர் டேனி பாய்ல், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை எடுத்திருந்தார்.

சே‌ரியில் வளர்ந்த சிறுவன் ஒருவன் குரோர்பதி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வதும், போலீஸ் விசாரணையில் அவனது கடந்த காலம் தெ‌ரிய வருதும்தான் படத்தின் கதை.

இந்த கதையினூடாக இந்தியர்களின் தொலைக்காட்சி மோகம், வறுமை எல்லாமும் விமர்சனம் செய்யப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்துக்கு இன்னொரு ப‌ரிமாணத்தை கொடுத்திருந்தது.

கோல்டன் குளோப் விருது ப‌ரிந்துரை பட்டியலில் சேஞ்சலிங் படத்துக்கு இசையமைத்த கிளின்ட் ஈஸ்ட்வுட்டும் இடம் பிடித்ததால் யாருக்கு விருது கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் போட்டியில் எளிதாக வெற்றிபெற்று விருதை கைப்பற்றியிருக்கிறார்.

இந்தியர் ஒருவர் Best original scor e ப ி‌ ரிவில் கோல்டன் குளோப் விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த விருது விரைவில் இசைப்புயல் மூலம் இந்தியாவுக்கு ஆஸ்கார் விருது கிடைப்பதற்கான நம்பிக்கையை பிரகாசப்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

Show comments