சினேகனின் காதல் பூச்சாண்டி

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (14:57 IST)
விவரமான பாடலும் அவ்வப்போது விவகாரமான பாடல்களும் எழுதி வருகிறவர் பாடலாச ி‌ ரியர் சினேகன். விரைவில் ஹீரோவாகப் போகிறவர், அம ீ‌ ரின் யோகி படத்தில் சின்ன வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஓடிப்போலாமா படத்தில் இவர் எழுதியிருக்கும் பாடலொன்று இப்போதே பரவாலாக பேசப்பட்டு வருகிறது.

கண்மணி இயக்கும் ஓடிப்போலாமா படத்தில் சந்தியாவும், நடிகை சங்கீதாவின் தம்பி ப‌ரிமளும் நடித்து வருகின்றனர். கதைப்படி இவர்களின் காதல் போராட்டத்துக்கு நடுவில் தத்துவப் பாடலொன்று வருகிறது.

தத்துவப் பாடலென்றால் தாடி வைத்த கிழவர் கறுப்பு கம்பளியால் உடம்பை மூடி தாளம் தட்டி பாடுவதுதான் தமிழ் சினிமாவின் பாரம்ப‌ரிய வழக்கம். கண்மணி பாரம்ப‌ரியத்துக்கு எதிராக உடம்பு தெ‌ரியும் காஸ்ட்யூமுடன் ரகசியாவை ஆடவிட்டிருக்கிறார். கூடவே சந்தியாவும் ப‌ரிமளும் ஆடியிருக்கிறார்கள்.

இந்த தத்துவ சிச்சுவேஷனுக்கு எற்றபடி காதல் பூச்சாண்டி என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார் சினேகன். காதல் பிசாசு போல் ஹிட்டாகும் என இப்போதே ஆருடம் சொல்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments