தெலுங்கில் சத்யரா‌ஜ்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:51 IST)
தெலுங்கு படத்தில் சத்யரா‌ஜ் நடிக்க இருக்கிறார் என்ற வதந்தி சில நாட்களாகவே கோடம்பாக்கத்தை வலம் வந்தது. இதனை நேற்று ஒப்புக் கொண்டார் சத்யரா‌ஜ்.

சத்யரா‌ஜ் புரட்சி‌த் தமிழன் ஆவதற்கு பல வருடங்கள் முன்பு - ச‌ரியாகச் சொல்வதென்றால் 27 ஆண்டுகளுக்கு மு‌ன் தெலுங்கில் சில படங்கள் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு வாய்ப்புகள் வந்தும் ஆந்திர‌ப் பிரதேசத்தில் அவரது காலடி பதிந்ததில்லை.

27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். அதுவும் ஹீரோவின் அப்பாவாக. ஏன்?

“இயக்குனர் சிவா சொன்ன கதை அவ்வளவு நன்றாக இருந்தது. கோபிசந்த் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவரது அப்பாவாக நான் நடிக்கிறேன். என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதால் நடிக்க ஒத்துக் கொண்டேன்.”

பெருந்தன்மையாக பேசும் சத்யரா‌ஜ் சிவா‌‌ஜ ி மற்றும் தசாவதாரத்தில் நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments