ஜன. 12 முதல் வில்லு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:35 IST)
விஜய் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம், ஜனவ‌ர ி 12‌ ம் தேதியே திரைக்கு வருகிறது வில்லு.

அழகிய தமிழ் மகன், குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால், வில்லுவின் ‌ரிசல்டுக்கு ஆவலாக காத்திருக்கிறார் விஜய். போக்க ி‌ ர ி படம் மூலம் விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த பிரபுதேவா வில்லுவை இயக்கியிருப்பது வில்லுவின் வெற்றி சதவீதத்தை அதிக‌ரித்துள்ளது.

இரண்டு நாள் முன்பு படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர். படத்தின் சில காட்சிகளுக்கு அவர்கள் ஆட்சேபம் தெ‌ரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயுடன் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் படம் வில்லு என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் குருவி, அழகிய தமிழ்மகன் படங்கள் சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இது படம் ஓடும் நாட்களை குறைக்கும் என்பதால் வில்லு வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பத்துக்கும் குறைவான திரையரங்குகளில்தான் வில்லு வெளியாக இருப்பது, படத்தை முதல் நாளே பார்த்துவிடத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்திதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments