மீண்டும் கனிகா

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:34 IST)
திருமணமாகி சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கனிகா மீண்டும் நடிக்க வருகிறார். ஜெயராம் ஜோடியாக அவர் நடிக்கும் மலையாளப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகாவுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். அ‌ஜித் ஜோடியாக நடித்த வரலாறு இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இவர் கடைசியாக நடித்தப் படம், மம்முட்டியின் பழஸிராஜ ா. இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், கனிகா. கேரளாவின் குட்ட நாடு பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இளையராஜ ா படத்துக்கு இசையமைக்கிறார்.

நல்ல வேடங்கள் அமைந்தால் தமிழிலும் நடிக்க தயாராக உள்ளார், கனிகா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments