இந்தி ரீ-மேக்கில் கமல்?

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:32 IST)
பாலிவுட்டில் சென்ற வருடம் மெகா பட்ஜெட் படங்கள் பல மண்ணை‌க் கவ்வியபோது, மினிமம் பட்ஜெட்டில் தயாரான படங்கள் லாபம் சம்பாதித்து‌க் கொடுத்தன.

ராக் ஆன், லாஸ்ட் லியர், கோஸ்லா கா கோஸ்லா, தி வெனெஸ்டே… என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் நீரஜ் பாண்டேயின் தி வெனெஸ்டே விமர்சகர்களின் பெருத்த வரவேற்பை பெற்றது.

மும்பை குண்டு வெடிப்பை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்க கமல்ஹாசன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நஸ்ருதீன் ஷா நடித்த வேடத்தில் கமலும், போலீஸ் கம ி­ னராக அனுபம் கெர் நடித்த வேடத்தில் மம்முட்டியும் நடிக்கயிருப்பதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, தி வெனெஸ்டே திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக சில வாரங்கள் முன் செய்திகள் வெளியாயின. இந்தியில் தி வெனெஸ்டே படத்தை தயாரித்த யு டிவி நிறுவனம் இதனை மறுத்தது.

இந்தியில் தயாரித்த படங்களை தமிழில் ரீ-மேக் செய்யும் எண்ணம் இருப்பதாகவும், ஆனால் தி வெனெஸ்டே படத்தின் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் யு டிவி நிர்வாகி தெரிவித்தார்.

கமல் தி வெனெஸ்டே ரீ-மேக்கில் நடிப்பது குறித்து இதுவரை யு டிவி தரப்பில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

Show comments