ஆர்யாவின் ஹலோ ஆட்டோ

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:26 IST)
நான் கடவுள் படத்திற்காக ஆர்யா பல வருடங்களாக காத்திருப்பது தெ‌ரியும். கொடுமை என்னவென்றால் அவர் நடித்த படமொன்றும் நான் கடவுள் ‌ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

புஷ்கர்-காயத ்‌ ர ி தம்பதியின் ஓரம்போ படத்தை தெலுங்கில் ஹலோ ஆட்டோ என்ற பெய‌ரில் மொழிமாற்றம் செய்து தயாராக வைத்துள்ளனர். ஓரம்போவில் நடித்த ஆர்யாவுக்கும் ச‌ர ி, உடன் நடித்த பூஜாவுக்கும் ச‌ர ி ஆந்திராவில் சொல்லிக் கொள்ளும்படி ரசிகர் வட்டம் இல்லை.

அதேநேரம் பாலாவின் படங்களுக்கு அங்கு நல்ல மார்க்கெட் உள்ளது. நான் கடவுள் படம் தமிழில் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் படம் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

ஓரம்போவில் நடித்த ஆர்யா, பூஜ ா ஜோடிதான் நான் கடவுளிலும் நடித்திருப்பதால், நான் கடவுள் படத்துக்குப் பிறகு தெலுங்கு ஹலோ ஆட்டோவை ‌ரிலீஸ் செய்வது என்ற முடிவுடன் நான் கடவுளுக்காக காத்திருக்கிறார்ள்.

உறுமீன் வரும்வரை காத்திருப்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments