ஏ.ஆர். முருகதாஸுக்கு பாராட்டு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:22 IST)
என்னதான் சொல்லுங்கள், பாலிவுட்டில் படம் இயக்கும் ஆசை நம்மவர்களின் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கமல் தொடங்கி கௌதம் வரை அனைவரும் இதில் அடக்கம்.

மணிரத்னம் தொடர்ந்து இந்திப் படங்கள் இயக்கினாலும், சூப்பர் ஹிட் வெற்றி என்பது இன்னும் எட்டாமலேதான் இருக்கிறது. பாலிவுட்டிற்கு க‌ஜினி மாத ி‌ ர ி பலமுறை படை எடுத்தவர் கமல். பலன் இதுவரை பூ‌ஜ்யம்.

இந்தப் பின்னணியில் பார்த்தால் இந்தி க‌ஜினி மூலம் ஏ.ஆர். முருகதாஸ் பெற்றிருக்கும் வெற்றி எத்தனை முக்கியமானது என்பது ப ு‌ ரியும்.

க‌ஜினி பார்த்து வட இந்தியாவே கலகலக்கிறது. ஷாருக் தொடங்கி முன்னணி நடிகர்கள் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் டை‌ரியுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த பிரபல்யத்தின் அதிர்வை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் காண முடிந்தது.

கூட்டத்துக்கு வந்த முருகதாஸை மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார் இயக்குனர் பாலசந்தர். அனைவ‌ரின் பலத்த கரவொலிக்கு நடுவில் இந்த ம‌ரியாதை செய்யப்பட்டது.

நியாயமான ம‌ரியாதை என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments