ஆங்கிலத்தில் எந்திரன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:18 IST)
ரஜினியின் பெயர் இந்தியாவுக்கு வெளியேயும் பிரபலம். ஜப்பானில் ரஜினியின் படங்கள் நூறு நாட்கள் ஓடுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது.

சந்திரமுகி தென் ஆப்பிரிக்காவில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிவாஜி வெளிநாடுகளில் ஏற்படுத்திய வசூல் சாதனை நம்ப முடியாதது. யு.கே. டாப் டென்னில் இடம் பிடித்து தமிழின் பெருமையை உலகறிய செய்தது சிவாஜி.

எந்திரன் சிவாஜியை போல கதையிலும், பிரமாண்டத்திலும் பல மடங்கு பெரிய படம். எந்திர மனிதனைப் பற்றிய படம் என்பதால் ஹாலிவுட்டிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆங்கில சப் டைட்டிலுடன் அமெரிக்காவில் படத்தை வெளியிடுவதற்கான பூர்வாங்க வேலைகளில் இப்போதே இறங்கியுள்ளது, சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஹெச்பிஓ நிறுவனத்துடன் இதற்கான பேச்சுவார்த்தையை சன் பிக்சர்ஸ் தொடங்கி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments