முதலிடத்தில் சிலம்பாட்டம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:10 IST)
ஆபாசம் என்ற விமர்சனங்களை தாண்டி செ‌ன்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சிம்புவின் சிலம்பாட்டம். இந்த வருடத்தின் கடைசி ஹிட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1. சிலம்பாட்டம்

வார இறுதியில் 35 லட்சங்கள் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது சிலம்பாட்டம். ஆக ்­ ஷன் காட்சிகளும் படத்தின் பாடல்களும் இளைஞர்களை திரையரங்கை நோக்கி ஈர்ப்பது சிலம்பாட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். சென்னையில் மட்டும் இதுவரை ஒன்றரை கோடி வசூலித்து எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது சிம்புவின் இப்படம்.

2. அபியும் நானும்

இந்த வருடம் வெளியான வெள்ளித்திரை, ராமன் தேடிய சீதை, பூ படங்களின் வரிசையில், நல்ல படம் ஆனால் சுமாரான கலெக் ச­ ன் என்ற அபாயத்தை சின்ன இடைவெளியில் கடந்திருக்கிறது, ராதா மோகனின் இந்தப் படம். நடிப்பு, திரைக்கதை, இசை என அனைத்தும் கவரும் விதத்தில் இருப்பது படத்தின் சிறப்பு. வார இறுதியில் 10.68 லட்சங்கள் வசூலித்திருக்கும் இப்படம், இதுவரை 41 லட்சங்கள் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

3. பஞ்சாமிர்தம்

வருட இறுதியில் நமிபிக்கை அளிக்கும் விதமாக வெளியாகியிருக்கிறது ராஜ ஈஸ்வரனின் பஞ்சாமிர்தம். குழந்தைகளை கவரும் காமெடி படத்தின் ப்ளஸ். வெளியான முதல் நான்கு தினங்களில் ஒன்பதரை லட்சங்கள் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

4. திருவண்ணாமலை

பேரரசுவின் மெகா ப்ளாப் என்றால் அது திருவண்ணாமலைதான். வார இறுதி வசூலில் திண்டுக்கல் சாரதிக்கு அடுத்த இடத்தில் வரும் இப்படம் இதுவரை 41 லட்சங்களை வசூலித்துள்ளது. தினமும் குறைந்துவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை படத்தின் தோல்வியை உறுதி செய்கிறது.

5. திண்டுக்கல் சாரதி

சென்னை பாக்ஸ் ஆபிஸில் கருணாஸின் திண்டுக்கல் சாரதிக்கு ஐந்தாவது இடம். முதல் வார இறுதியில் 27 லட்சங்களை வசூலித்துள்ளது இப்படம். உபயம் சன் தொலைக்காட்சியின் அபிரிதமான விளம்பரம். வெளியூர்களில் படத்தின் வசூல் சுமார் என்பது கவலைதரும் செய்தி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?