இனி நடனம் மட்டுமே என் தொழில்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:54 IST)
அஜித்தை வைத்து தான் இயக்கிய 'ஏகன்' படம் தோல்வி அடைந்ததால், இனி இயக்கப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளார் ராஜு சுந்தரம்.

அஜித்தை வைத்தே வெற்றிப் படம் கொடுக்க முடியவில்லையே என்ற வேதனையில் தன் பழைய தொழிலான நடன இயக்குனர் வேலையே போதும் என்று தீர்மானித்திருக்கிறார்.

அதனால் வரும் பட வாய்ப்பை விடாமல் முன்பை விட அதிகம் ஈடுபாட்டோடு இருக்கிறார் ராஜு. அதுமட்டுமின்றி, தான் நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு படத்தை மிகவும் நம்பி இருக்க, அதுவும் பாதியில் நின்று போக, இனி இயக்குவது, நடிப்பது அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடனம் அமைக்க மட்டுமே முடிவு செய்திருக்கிறார்.

தற்போது விஜய் நடிக்க, பிரவுதேவா இயக்கும் 'வில்லு' படத்தில் ஒரு பாடலுக்கும், ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் 'எந்திரன்' படத்துக்கும் நடன இயக்குனராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்போதாவது தெரியாத தொழில் எல்லோருக்கும் கைகொடுக்காது என்பதை புரிந்துகொண்டாரே அதற்காக அவரைப் பாராட்டலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments