Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக வைக்கும் குறும்படம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:44 IST)
இலங்கையில் ஏ‌ற்படு‌ம் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் பிரதீபன். தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் போர் சூழ்நிலைக்கேற ் ப உருவாக்கப்பட்டுள்ள படம்.

' என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். மிகவும் உருக்கத்துடன் எடுக்கப்பட்ட இக்குறும்படம் பார்க்கும் அனைவரையும் கலங்கடிக்கச் செய்யும் என்கிறார் பிரதீபன்.

அத்தோடு, பிப்ரவரி 2009-ல் நடக்கும் பெர்லின் திரைப்பட விழாவின்போது போட்டி பகுதியில் இப்படமும் கலந்துகொள்கிறது. பெர்லின் விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாக கருதப்படும். அப்போட்டியில் தென்னிந்தியப் படம் ஒன்று கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments