இணையும் கூட்டணி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:38 IST)
இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்து தொழில் கற்றவர். இறுதியாக இவர் இயக்கிய படம் அர்ஜுன் நாயகான நடித்த 'துரை'.

இதற்கு அடுத்து சேலம் சந்திரசேகர் தயாரிக்க, பரத் நடிக்கும் 'கில்லாடி' படம் மீண்டும் தள்ளிப்போக, தற்போது சரத்குமார் நடிக்கும் 'இமயமலை' என்ற படத்தை இயக்கவுள்ளார்.

சரத்குமாரை வைத்து முதல் படமான 'மகாபிரபு' என்ற படத்தை இயக்கியவர் அதன்பின் 'ஏய்' படத்தை இயக்கிவிட்டு தற்போது 'இமயமலை'யில் சரத்குமாரோடு இணைகிறார் வெங்கடேஷ்.

மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் சரத், இது தனக்கு நாட்டாமை, நட்புக்காக, சூர்யவம்சம் போன்று மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்குமென்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருப்பதால் தனது சொந்த நிறுவனமான 'ராடான்' மூலம் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் ராதிகா சரத்குமார். மூன்று வேடங்கள் என்பதால் ஒரு சரத்குமாருக்கு ஜோடியாக இன்றைய இளம் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வருகிறார் ஏ. வெங்கடேஷ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments