ஆர்.கே.-யின் அதிரடி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:33 IST)
தமிழ் சினிமாவில் ஜே.கே. ரித்த ீஸ ுக்கு போட்டியாக ஒருவர் உண்டென்றால் அது 'எல்லாம் அவன் செயல்' படத்தின் நாயகன் ஆர்.கே. தான்.

ஷாஜி கைலாஷின் கைவண்ணத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நடிகராக மாறியிருக்கிறார் ஆர்.கே. எப்படியும் வருடத்திற்கு மூன்று படங்களிலாவது நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

' எல்லாம் அவன் செயல்' ஆ‌க்ச‌ன ் படம் என்பதால் நில், கையைக் காட்டு, கோபமாக பார், எட்டி உதை என்று சொல்லி ஒரு புதுமுகத்தை எப்படி வேலை வாங்க வேண்டும், எப்படிப்பட்ட கதையை தேர்வு செய்து எடுக்க வேண்டும் என்பதில் ஷாஜி கைலாஷ் கவனமாக இருந்திருக்கிறார்.

மேலும், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டியது இருக்கும் என்று உணர்ந்த ஆர்.கே. முதல் வேலையாக தனது உடம்பை குறைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

அதற்காக சொந்தமாக ஒரு உடற்பயிற்சி கூடத்தை ஏற்பாடு செய்து, தினம் பல மணி நேரம் பயிற்சி செய்து வருகிறார். மேலும் தொடர்ந்து படங்களில் காதல் டூயட் பாடவேண்டியிருக்கலாம் என்பதால் நடனம் கற்றுக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.

வாங்க சார்... உங்களைப் போல பத்து ஹீரோ வந்தால்தான் கோடி கோடியாய் கேட்கும் ஹீரோக்கள் சிலர் அடங்குவார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

Show comments