கைதியாகிறார் அமீர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:30 IST)
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக இயக்குனர் சீமானோடு கைது செய்யப்பட்டவர் இயக்குனர் அமீர்.

தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த யோகி படம் பாதியில் நிற்க, ஜாமீனில் வெளிவந்து தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்த 15 நாட்களில் பல்வேறு கைதிகளை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

குற்றம் செய்து ஜெயலில் இருப்பவர்களின் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது என்றதோடு, உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு, ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பலரின் குடும்ப பின்னணிகளைக் கேட்டு கண் கலங்கியிருக்கிறார் அமீர்.

வெளியே வந்தவர் சூட்டோடு சில கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறார். தான் நடித்துவரும் யோகி படம் முடிந்ததும், கைதிகள் பற்றிய படம் இயக்கப் போகிறார்.

அக்கதைக்கு பொருத்தமான முன்னணி ஹீரோ ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார். அவர் நடிக்கவில்லை என்றால், அந்தப் படத்திலும் அமீரே ஹீரோ வேஷம் கட்டவும் தீர்மானித்துள்ளார். இப்படி எல்லோரும் நடிகனாகிவிட்டால் யார்தான் நல்ல படம் எடுப்பது?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments