கிராஃபிக்ஸில் கந்தசாமி, சர்வம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:20 IST)
மிகுந்த பொருட் செலவில் தயாராகி வருகிறது சுசி. கணேசனின் கந்தசாமி. படத்தை அடுத்த வருடம் பிப்ரவ‌ரியிலாவது வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் பம்பரமாக சுழல்கிறது மொத்த யூனிட்டும். போஸ்ட் புரொட‌க்ச‌ன் வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே இனி எடுக்கப்பட வேண்டும்.

கந்தசாமியில் அதிக அளவில் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. அதற்கே பல வாரங்கள் ஆகும் என்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் கணிசமான பகுதி கிராஃபிக்ஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஷ்ணுவர்தனின் சர்வம் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தை ‌ரிச்சாக காண்பிக்க பாடல் காட்சிகளை கிராஃபிக்ஸ் உதவியுடன் மெருகேற்றுகிறார்கள்.

நிஜம் எது, கிராஃபிக்ஸ் எது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உள்ளூரிலேயே சிறப்பான முறையில் கிராஃபிக்ஸ் அமைக்க முடியும் என்பதால், மினிமம் பட்ஜெட் இயக்குனர்களும் கிராஃபிக்ஸில் ஆர்வம் காட்டுகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments