ஆப்தமித்ரா இரண்டாம் பாகம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:51 IST)
ஆப்தமித்ரா, கன்னடத்தில் பி. வாசு விஷ்ணுவர்தனை வைத்து இயக்கிய படம். சௌந்தர்யா இதில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தைப் பார்த்துதான் சந்திரமுகி படத்தை இயக்கும் பொறுப்பை வாசுவிடம் ஒப்படைத்தார் ர‌ஜினி. ஆப்தமித்ராவின் ‌‌ரீ-மேக்தான் சந்திரமுகி. பாசில் இயக்கிய மணிசித்ரதாழ் படத்தின் உ‌ ரிமையை முறைப்படி வாங்கி கன்னடத்தில் ஆப்தமித்ராவை இயக்கியிருந்தார் வாசு.

தனக்கு கன்னடத்திலும், தமிழிலும் பெயர் வாங்கித்தந்த படத்தை அப்படியே விட வாசுக்கு மனமில்லை. ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

கன்னடத்தில் தயாராகும் இந்த இரண்டாம் பாகத்திலும் விஷணுவர்தனே ஹீரோ. சௌந்தர்யா இறந்துவிட்டதால் அவருக்குப் பதில் வேறு ஹீரோயின் நடிக்கிறார்.

இரண்டாம் பாகம் ஹிட்டானால் வாசுவின் அடுத்த ஸ்டெப், சந்திரமுகி இரண்டாம் பாகமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments