உடல் தானம் படத்தில் கமல்?

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:35 IST)
மருத்துவ கல்ல ூ‌ ர ி மாணவர்கள் படிப்பதற்காக தனது உடம்பை மருத்துவ கல்லூரிக்கு எழுதிக் கொடுத்தவர் கமல். உடல் தானம் பற்றியும், உறுப்புதானம் பற்றியும் விழிப்புணர்வு உரையாற்ற இவரைவிட பொருத்தமான நபர் வேறு யார் இருக்க முடியும்?

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் டி.பி. கஜேந்திரனின் மகனே என் மருமகனே படத்தின் கிளைமாக்ஸில் உடல்தானம் பற்றிய உருக்கமான காட்சிகள் இடம்பெறுகிறதாம். படத்தை பேச வைக்கப் போகும் காட்சிகளே இவைதானாம்.

இதில் பிரபல நடிகர் நடித்தால் காட்சிக்கு கனம் கூடும் என்பது கஜேந்திரனின் நியாயமான எண்ணம். அதற்கு பொருத்தமான இரு நபர்களை டிக் செய்திருக்கிறார்.

கஜ ேந்திரனின் முதலாவது சாய்ஸ் கம‌ல் ஹாசன். உடல் தானம் பற்றி‌ப் பேச உண்மையிலேயே தகுதி வாய்ந்த நபர். இரண்டாவது சாய்ஸ் புகையிலை, மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.

சம்பந்தப்பட்டவர்கள் சம்மதித்தால் இருவரையும் நடிக்க வைப்பது என்ற முடிவில் இருக்கிறார் டி.பி. கஜேந்திரன். இதற்காக விரைவில் இருவரையும் நே‌ரில் சந்தித்து பேச உள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments