திருநா - நில மோசடி கதை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:29 IST)
ஒரு தொழிலில் இருந்து கொண்டு அந்த தொழிலின் அயோக்கியங்களை வெளிப்படுத்த துணிச்சல் வேண்டும். திருநா படத்தின் தயாரிப்பாளருக்கு அந்த துணிச்சல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஈகை கருணாகரன் தயாரிக்கும் முதல் படம், திருநா. படம் தயாரிக்கும் எண்ணம் திடீரென்று எப்படி வந்தது என்று கேட்டால், மகனை ஹீரோவாக்க என பதில் வருகிறது. கருணாகரனின் மகன் சுபாஷ்தான் திருநா-வின் ஹீரோ. சுபா‌ஷ‌ின் ஒரிஜினல் பெயர், அருண் குமார். ஏற்கனவே ஒரு அருண் விஜய் இருப்பதால் குழப்பம் வேண்டாம் என பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

படத்தில் சுப ாஷ‌ ின் பெயர் திருநாவுக்கரசு. சுருக்கமாக திருநா. அதையே படத்தின் டைட்டிலாக்கியிருக்கிறார்கள். மதுரையிலிருந்து சென்னைக்கு தனது சொத்துக்களை விற்க வருகிறார் ஹீரோ. அவரை சிலர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். அதை எப்படி ஹீரோ முறியடிக்கிறார் என்பது திருநாவின் கதை.

ரியல் எஸ்டேட் மோசடிகளை பின்னணியாக வைத்து திருநாவின் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இதே கதைக் களத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Show comments