சிம்பு தேவன் இயக்கத்தில் லாரன்ஸ்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:26 IST)
நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்தால் படம் ஓடாது என்ற தமிழ் சினிமா சென்டிமெண்டை உடைத்தவர் சிம்பு தேவன்.

ஆனால், அடுத்தப் படத்திலேயே சினிமா சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்று யாருக்கு தெரியும்? இரண்டாவது படம் அறை எண் 305ல் கடவுள் சரியாக போகாததால் அடுத்து என்ன செய்வது என்ற திண்டாட்டத்தில் இருக்கிறார், சிம்பு தேவன்.

தனது முதல்பட ஹீரோ வடிவேலுவை மீண்டும் ஹீரோவாக்கும் முடிவில் கதை தயார் செய்தார் சிம்பு தேவன். இந்திரலோகத்தில் நா. அழகப்பன் கந்தர்கோலம் ஆனதை தொடர்ந்து உஷாரான வடிவேலு ஹீரோ என்றாலே தலைதெறிக்க ஓடுகிறார்.

சரி, விவேக்கை முயன்று பார்க்கலாம் என்றால், அவர் ஹீரோவாக நடித்த முதல் படமே இன்னும் பெட்டியைவிட்டு வெளியேறவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரை ஹீரோவாக வைத்து படம் பண்ணும் தைரியம் இன்டஸ்ட்ரியில் யாருக்கும் இல்லை.

காமெடியன்களை நம்பி இனி லாபம் இல்லை என்பதை புரிந்து கொண்டவர், லாரன்சுக்கு கதை தயார் செய்து வருகிறார். விரைவில் இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

Show comments