Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமாரின் இமயமலை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:25 IST)
மலை மலை படத்தை இயக்கிவரும் ஏ. வெங்கடேசுக்கு மலை மீது அப்படியயன்ன ப்ரியமோ. தனது அடுத்தப் படத்துக்கும் மலை என்றே பெயர் வைத்துள்ளார்.

அருண்விஜய், வேதிகா, பிரகாஷ்ராஜ் நடிக்கும் மலை மலை படத்தை தற்போது இயக்கி வருகிறார், வெங்கடேஷ். கிடைக்கிற கேப்பில் சுந்தர் சி-யின் வாடா படத்தையும் இயக்குகிறார். சேலம் ஏ. சந்திரசேகரின் நின்றுபோன கில்லாடி படத்திற்கு பைனான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் அதையும் இயக்கித் தருகிறார். இதில் பரத், நிலா நடிக்கின்றனர்.

இந்தப் படங்களுக்குப் பிறகு தனது ஆஸ்தான கதாநாயகன் சரத்குமாரை வைத்து இமயமலை என்ற படத்தை இயக்குகிறார். மற்ற இயக்குனர்கள் ஒரு படத்தை முடிக்கவே அல்லாடும்போது இவரால் மட்டும் எப்படி வருடத்துக்கு அரைடஜன் படங்கள் பண்ண முடிகிறது?

கோடம்பாக்கத்தின் மற்ற இயக்குனர்களைப் போல படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என எல்லா பொறுப்புகளையும் இவரே சுமப்பதில்லை. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் அந்தப் பொறுப்புகளை தந்து விடுகிறார். இயக்கம் மட்டுமே இவரது வேலை. இதே ஸ்டைலில் தொடர்ந்து படம் பண்ணும் இன்னொருவர், கே.எஸ். ரவிக்குமார்.

அதிக சுமையால் அல்லாடுகிறவர்கள் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

Show comments