Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்று படங்கள் ஆரம்பம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:21 IST)
தமிழ் சினிமாவுக்கு இன்று முக்கியமான தினம். அதிலும் பார‌‌திராஜாவுக்கு அதி முக்கியமான நாள். இயக்குனர்கள் சங்க‌த் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தோஷம் ஒருபுறம் என்றால், யாருடைய திரைப்படங்கள் பார்த்து சினிமாவுக்கு வந்தாரோ அவருடன் இணைந்து நடிக்கப் போகும் திரைப்படமும் இன்றுதான் ஆரம்பமாகிறது.

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ ரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டச்சுழி படத்தில் முதல் முறையாக இயக்குனர் சிகரம் பாலசந்தரும், இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடிக்கின்றனர். உடல்நிலை ச‌ரியில்லாததால் பாலசந்தர் நடிப்பது கடைசி வரை சந்தேகமாகவே இருந்தது.

ஆனால் சிஷ்யன் தாமிராவின் படத்தில் எப்படியும் நடிப்பேன் என உறுதி அளித்துள்ளார், பாலசந்தர். இதன் படப்பிடிப்பு இன்று நெல்லையில் தொடங்குகிறது. முதலில் குழந்தைகள் இடம்பெறும் காடசிகளை எடுக்க திட்டமிட்டுள்ளார், தாமிரா.

இன்று படப்பிடிப்புடன் தொடங்கும் இன்னொரு பட‌ம் ரேனிகுண்டா. பிலிம் பேப ்‌ ரிகேட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இதனை தய ா‌ ரிக்கிறது. ஆர். பன்னீர்செல்வம் படத்தை இயக்குகிறார்.

மூன்றாவது படம் ஆர். பாலகும ா‌ ரின் யாதுமாகி. சோழா க ி‌ ரியேஷன்ஸ் பொன்னுரங்கம் தய ா‌ ரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் யுவன் நடிக்கிறார். ஜ ேம்ஸ் வசந்தன் இசை. முகமது நசீர் ஒளிப்பதிவு. காதலுக்கு காதலர்களே எத ி‌ ரியானால் எப்படி இருக்கும் என்ற பின்னணியில் தயாராகிறது யாதுமாகி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

Show comments