Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்யூனிஸ்டுகளை காயப்படுத்தும் காஞ்சீவரம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:12 IST)
மூக்கு விடைக்கும் கோபத்தில் இருக்கிறார்கள் தோழர்கள். காஞ்சீவரம் படத்தில் கம்யூனிஸ்டுகளை கொச்சைப்படுத்துவதுபோல் காட்சிகள் இருப்பதாக வரும் தகவல்கள்தான் தோழர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்?

சுதந்திரத்துக்கு முற்பட்ட காஞ்சீவரம் பட்டு நெசவாளர்களின் கஷ்டத்தை சொல்கிறது ப ்‌ ரியதர்ஷனின் படம். பட்டு நெசவாளராக வரும் பிரகாஷ்ர ா‌ ஜ ், தனது திருமணத்தின்போது மனைவிக்கு பட்டுச் சேலை அளிப்பேன் என்று கூறுகிறார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போகிறது. தனது மகளின் திருமணத்திற்காவது பட்டுச் சேலை அளிப்பேன் என்று கூறுகிறார் பிரகாஷ்ர ா‌ ஜ ். அதற்காக பட்டு நெய்யும்போது நூல்களை வாய்க்குள் மறைத்து வீட்டிற்கு எடுத்து செல்கிறார்.

இதனிடையில் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களிடையே மாற்றத்தை கொண்டு வருகின்றனர். அடிப்படை உ‌ ரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்துகின்றனர். மறுபுறம் பிரகாஷ்ர ா‌ ஜின் மகளுக்கு அவரது நண்பர் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரகாஷ்ராஜும் அவரது நண்பரும் சண்டையிடும்போது பிரகாஷ்ர ா‌ ஜ் வாய்க்குள் மறைத்து பட்டு நூல் எடுத்து செல்வது அம்பலமாகிறது. இதன் காரணமாக அவரது மகளின் திருமணம் தடைபடுவதுடன் திருடன் என்று கூறி அவரை சிறையில் தள்ளுகின்றனர். வாத நோயால் மகள் கஷ்டப்பட, அதை பார்க்க சகிக்காத பிரகாஷ்ர ா‌ ஜ் பரோலில் வெளியே வரும்போது மகளுக்கு தனது கையால் விஷம் கொடுத்து கொலை செய்கிறார்.

கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ர ா‌ ஜ் சுயநலவாதியாகவும், அவரது இடதுச ா‌ ர ி நண்பர்களை இரக்கமற்றவர்களாகவும் ப ்‌ ரியதர்ஷன் சித் த‌ ரித்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களோ, விவசாயிகளோ... அவர்களின் உ‌ ரிமைகளுக்காக முதலில் போராடியவர்கள் இடதுச ா‌ ரிகள். அந்த வரலாற்றை ப ்‌ ரியதர்ஷன் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்பதே படம் பார்த்தவர்களின் ஆதங்கம்.

படம் திரையரங்குகளுக்கு வரும்போது எதிர்ப்பு இன்னும் வலுப்படும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments