நாளை முதல் தநா 07 அல 4777 இசை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:10 IST)
விஜய் ஆண்டனியின் அடுத்த அட்டாக், தநா 07 அல 4777. டாக்சி நம்பருடன் வெளிவரும் இந்தப் படம் நானா படேகர், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளிவந்த Taxi No 9211 படத்தின் ‌‌‌ரீ-மேக். ஆ. இலட்சுமிகாந்தன் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜான் நடித்த வேடத்தில் அ‌‌ஜ்மல், நானா படேகர் வேடத்தில் பசுபதி. தமிழுக்கு முற்றிலும் வித்தியாசமான இந்தப் படத்தை தமிழுக்காக சிறிது மாற்றியிருக்கிறாராம் இலட்சுமிகாந்தன். குறிப்பாக அ‌ஜ்மல் - மீனாட்சி காதல், டூயட். படத்தின் இன்னொரு அட்ரா‌க்சன், சிம்ரன்.

தனது முந்தைய படங்கள் போலவே அதிரடி இசையால் படத்தை நிரப்பியிருக்கிறாராம் விஜய் ஆண்டனி. அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர், நா. முத்துக்குமார்.

நாளை படத்தின் இசை வெளியீட்டு விழா. பாடல்களை வெளியிடுவது விஜய் ஆண்டனி மியூஸிக். ஆச்ச‌ரியம் வேண்டாம். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி புதிதாக தொடங்கியிருக்கும் ஆடியோ நிறுவனம்தான் இந்த விஜய் ஆண்டனி மியூஸிக்.

‌ ஜிவி பிலிம்ஸ் படத்தை தய ா‌ ரித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீசுக்கு முட்டுக்கட்டை.. விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

Show comments