Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்பட பயிற்சி‌ப் பட்டறை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:57 IST)
நிழல் இதழும், பதியம் அமைப்பும் இணைந்து குறும்பட, ஆவணப்பட பயிற்சி பட்டறையை சேலம் வளசைய ூ‌ ரில் நடத்துகின்றன.

இந்தியாவில் அதிக குறும் படங்களும், ஆவணப் படங்களும் தயாராகும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தப் படங்களையும், படைப்பாளிகளையும் தொடர்ந்து ஊக்குவித்துவரும் நிழல் இதழ், தமிழகம் முழுவதும் குறும்பட, ஆவணப்பட பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.

வரும் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வளசைய ூ‌ ரில் நிழல் இதழும், பதியம் அமைப்பும் இணைந்து ஆறு நாள் பயிற்சி பட்டறையை நடத்துகின்றன.

" இந்த பயிற்சி பட்டறையில் குறும்பட, ஆவணப்பட வரலாறு, அவற்றின் இலக்கணம் ஆகியவற்றை சொல்லித் தருகிறோம். அத்துடன் கேமரா, திரைக்கதை, எடிட்டிங், நடிப்பு என காட்சி ஊடகத்துக்கு தேவையான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும். உலகின் சிறந்த ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்கிற மாணவர்களை குழுக்களாக ப ி‌ ரித்து அவர்களே குறும் படம் எடுக்க வசதி செய்து தரப்படும். படத்தை அவர்களே எடிட் செய்து பயிற்சி முடிவில் ஒரு படைப்பாளியாக வெளியே செல்லலாம்” என்றார், நிழல் இதழின் ஆச ி‌ ரியர் ப. திருநாவுக்கரசு.

பயிற்சி‌ப் பட்டறையில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படு;ம். இந்த பயிற்சியின் முக்கிய அம்சம், தமிழின் தலைசிறந்த இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் கலந்து கொண்டு தங்களது துறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். அவர்களுடன் விவாதிக்கவும் வசதி செய்து தரப்படும்.

இந்தப் பயிற்சி‌ப் பட்டறையில் கலந்து கொள்ள ஆறு நாட்களுக்கான உணவு, தங்கும் விடுதி உள்பட கட்டணம் 1,500 ருபாய். மேலும் விவரங்களுக்கு நிழல் ஆச ி‌ ரியரை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments