சினிமா விருதுகளை தேர்வு செய்ய குழு: கருணாநிதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:49 IST)
தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், 2007- 2008 ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும்; 2006-2007, 2007-2008ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம ், தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்ய தேர்வுக்குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன் ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பார். திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான், திரைப்பட நடிகர்கள் வாகை சந்திரசேகர், சாருஹாசன், திரைப்பட இயக்குநர் பி.அமிர்தம், திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் நடராஜன், இசை அமைப்பாளர் தேவா, திரைப்பட நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், குமரிமுத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்ப ட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments