சென்ஸாரில் சிக்கிய பாம்பு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:48 IST)
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் தனது மகன் விஜய சிரஞ்சீவியை வைத்து இயக்கித் தயாரித்துள்ள படம் 'சூர்யா'.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு தற்போது வெளியாகும் நிலையில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பாம்பிடம் சிக்கிக்கொண்ட தனது காதலி நீயாவைக் காப்பாற்ற போராடுவது போல் ஒரு காட்சி.

ஐந்து லட்சம் வரை செலவு செய்து எடுக்கப்பட்ட காட்சி இது. எல்லாம் முடிந்து சென்ஸாருக்கு செல்ல... பாம்பு இடம்பெறும் காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்த உறுப்பினர்கள் அதன் உரிமையாளர்களிடம் பாம்பு சித்ரவதை செய்யப்பட வில்லையெனும் ஒப்புதல் கடிதம் வாங்கிவரச் சொல்ல... இதனால் ஏதேனும் பிரச்சனை வரும் என்று பயந்த பாம்பின் உரிமையாளர் கடிதம் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் கடுப்பான ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம். அந்த பாம்பு காட்சியை படத்திலிருந்தே நீக்கிவிட்டார். ஏகப்பட்ட சோதனைக்குப் பின் பாம்பு கடியிலிருந்தும் தப்பித்து வெளிவர இருக்கிறது சூர்யா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

Show comments