Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் படங்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:31 IST)
வருட இறுதியில் ட்ராபிக் ‌ஜாமில் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். கால்ஷீட் பிரச்சனை, பைனான்ஸ் பிரச்சனை, விற்பனை பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளால் தள்ளிப்போன படங்கள் டிசம்பரை குறி வைத்து முண்டியடித்து நிற்கின்றன. சின்னதாக பட்டியல் போட்டாலே அது கோடம்பாக்கம் பாலத்தை தாண்டும்.

குரு என் ஆளு தீபாவளிக்கே முண்டா தட்டி கோதாவில் குதிக்க இருந்த படம். என்ன காரணமோ, டிசம்பர் க்யூவில் காத்திருக்கிறது. அதேபோல் சிம்புவின் சிலம்பாட்டம். தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட இப்படம் டிசம்ப‌ரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிரா‌ஜாவின் பொம்மலாட்டம் இதோ அதோ என போக்கு காட்டி இப்போதுதான் (டிச.12) திரைக்குவர தயாராகிருக்கிறது. ஆலயம் என்ற பெய‌ரில் பல மாதங்கள் முன்பே தயாரான படம், சாமிடா என்ற புதுப் பெயருடன் டிசம்பர் 6‌ஆ‌ம் தேதி வெளியாகிறது.

இது தவிர ராஜு ஈஸ்வரனின் பஞ்சாமிர்தம், எஸ்.ஜே. சூர்யாவின் நியூட்டனின் 3ஆம் விதி, ஏவிஎம்-‌ன் அஆஇஈ, சுந்தர் சி-யின் தீ, பேரரசு‌வி‌ன் திருவண்ணாமலை.. பட்டியல் நீண்டு செல்கிறது.

இத்தனை படங்களுக்கு திரையரங்குகள் பத்துமா என்பதுதான் சந்தேகமே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments