விஜயை காக்க வைத்த வில்லன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:23 IST)
நிஜ வில்லன் மாத ி‌ ர ி அனைவரையும் பயமுறுத்தி வருகிறார், பிரகாஷ்ர ா‌ ஜ். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிப்பதால் மனிதர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிக்க தனி புலனாய்வு படையே தேவைப்படுகிறது. இவரால் விழிபிதுங்கிப் போனவர்கள் ஏராளம். விஜயும் இந்த லிஸ்டில் இருப்பதுதான் ப‌‌ரிதாபம்.

வில்லு படத்தில் பிரகாஷ்ரா‌ஜ் வில்லனாக நடித்து வருகிறார். திருச்செந்தூரில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பதற்காக விஜய் சகிதம் கிளம்பி போயிருக்கிறார்கள். கதாநாயகன் மட்டும் இருந்தால் போதாதே. வில்லனும் வேண்டுமே. பத்து நாள் காத்திருந்தும் கிடைக்கவில்லையாம் வில்லனின் த‌ரிசனம்.

கடுப்பாகிப் போன யூனிட் கையை பிசைந்து கொண்டிருக்க, பொங்கலுக்கு படத்தை ‌ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கவலையில் இருக்கிறதாம் தய ா‌ ரிப்பாளர் தரப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

'பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சென்சார் சான்றிதழ்.. நாளைய ரிலீஸ் உறுதி..!

சீமானுக்காக பேரை மாற்றிய ஜனநாயகன் பட இயக்குனர்!.. இது தெரியாம போச்சே!...

Show comments