சினேகா படப்பிடிப்பில் இந்து முன்னணி தகராறு!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:27 IST)
சினேகா நடிக்கும் பவானி படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது. சினேகா, ரா‌ஜ்கபூர் நடித்து வருகின்றனர். ஆர்த்தி குமார் படத்தை இயக்கி வருகிறார்.

பாளையங்கோட்டை ராமர் கோவிலில் படப்பிடிப்பு நடத்த முறைப்படி அனுமதி வாங்கி அங்கு படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார் ஆர்த்தி குமார். அந்த நேரம் அங்கு வந்த இந்து முன்னணியினர், கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

முறைப்படி அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று படப்பிடிப்பு குழுவினர் கூறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு விரைந்து வந்த போலீஸார், இந்து முன்னணியினரை கைது செய்து அழைத்து சென்றனர்.

பிறகு, போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் ஆர்த்தி குமார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments